ருச்சிகா விவகாரம் பற்றி தெரியும்.ஆறுமாதம் சிறையும் தெரியும் ஆயிரம் ரூபாய் அபராதமும் தெரியும்.காதலனுடன் சேர்ந்து மகனையோ கணவனயோ கொல்லும் மனைவிகளையும் தெரியும்.இது போல் நாட்டின் எல்லா மூலைகளிலும் தினமும் நடக்கும் எத்தனையோ எண்ணற்ற பாலியல் கொடுமைகளைப் பற்றி செய்திகளில் பார்த்துக் கொண்டும் படித்துக் கொண்டும்தான் இருக்கின்றோம்.அவற்றில் அதிகமாக குழந்தைகள் பாலியல் கொடுமைகளையும் படித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இவற்றில் பால் வித்தியாசங்கள் பாராமல் அரங்கேற்றப்படுவதுதான் மிகப் பெரிய காட்டுமிராண்டித்தனமே.!
இவற்றிற்கெல்லாம் நாம் என்ன செய்துவிடமுடியும்..? நம் குழந்தைகளுக்கு தேவையான விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தினாலே அது போதுமானதுதானே...! யார் யார் எப்படிப்பட்டவர்கள்..? அவர்களின் பார்வை என்ன..? அவர்களில் தொடுகை கெட்டதா..? நல்லதா..? என தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, சமூகத்துக்கு நாமும் உருப்புடியாய் ஏதாவது செய்ய வேண்டும் எனும் நோக்கில் பதிவர்களால் ஒரு கருத்தரங்கு மதுரையில் ஏற்பாடாகியுள்ளது.
பெற்றோர்களும்,சமூக அக்கறையுடன் கூடிய முனைப்பும் உள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ளுங்கள்.இங்கு பரிமாறப்படும் மற்றும் விவாதிக்கப்படுபவை உங்களுக்கும் உங்களால் சிலருக்கும் கடத்தப்படுவதிலேயே இந்த கருத்தரங்கின் வெற்றி அடங்கியுள்ளது. ஆகவே தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறவும்..! அனுமதி இலவசம்..!
நாள் : 31.01.2010 ஞாயிறு
காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை
இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )
கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி.MBBS, DPM, Ph D, FIPS.
மேலதிக விவரங்களுக்கு,
தருமி-9952116112
சீனா அய்யா-9840624293
பாலகுமார்-9486102490
ஜெரி ஈஷானந்தா-9791390002
ஸ்ரீ-9360688993
கார்த்திகைப்பாண்டியன் -9842171138
மின்னஞ்சல் தொடர்புகளுக்கு:
dharumi2@gmail.com
sridharrangaraj@gmail.com
karthickpandian@gmail.com
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
சீனா அய்யா.
ஸ்ரீதர்
கார்த்திகை பாண்டியன்.
பாலகுமார்.
Next மீட் பண்ணுவோம்....
♠ராஜூ♠
14 பின்னூட்டங்கள்:
நன்றி பதிவிற்கு. உபயோகமாக அமைய வாழ்த்துக்கள்.
நல்லபடியாய் நடக்க வாழ்த்துக்கள்..:)
அவசியமான நிகழ்ச்சி தான். வெற்றிகரமாக நடத்த வாழ்த்துக்கள்
நல்லதொரு தகவல். நிகழ்ச்சி சிறப்பாய் நடந்திட வாழ்த்துக்கள்.
மிக முக்கியமான கருத்தரங்கு இது. சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.
சிறப்புடன் கருத்தரங்கு நடைபெற வாழ்த்துகள்.
பலரும் பயன் பெற வேண்டும். இது நாட்டுக்கு தேவையான ஒன்று.
இது போன்ற முன்னுதாரண நிகழ்வுகள் வரவேற்கப்படவேண்டியன. என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
தலைப்பை கொஞ்சம் பளிச்சென விஷயத்தை அறிவுறுத்தும் வகையில் வைத்திருக்கலாமோ?
நல்லதொரு தகவல். நிகழ்ச்சி சிறப்பாய் நடந்திட வாழ்த்துக்கள்.
இது போன்ற விழிப்புணர்வு கூட்டங்கள் சிறப்பாய் தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள்.
நீங்க ஆட்டோ அனுப்பினா ஜாலியா வந்து கலந்துக்குவேனே!!!!!!!!!!!!!!
எல்லோரும் வாங்க ,"பழகலாம்.".
நிகழ்வு பயன்தரத்தக்க அளவில் நடைபெற வாழ்த்துகள்.
கண்டிப்பாக உபயோகமாக அமையும் எஸ்.கே. நன்றி.
நன்றி பலா பட்டறை.ஷங்கர்,லோகு துபாய்ராஜாண்ணே,சரவணக்குமார்,
இராதாகிருஷ்ணன்ன்,சித்ரா,ஜெகநாதன் (ஆமா தல),சதீஷ்,தவபுதல்வன், ஈஷானந்தா.
Post a Comment